விநாயகர் சதுர்த்திக்கும், தமிழ் தொலைக்காட்சி படங்களும் என்ன சம்பந்தம்? இப்படி தேவையில்லா கேள்வி கேட்பவருக்காக, தொலைக்காட்சி முன் தவம் இருக்கும் தொல்ஸின்(தொல்காப்பியனின்) அதிரடி பகிரங்க கடிதம்,
சன் டிவி - சிவா மனசுல சக்தி. விநாயகரின் தந்தை சிவா, தாய் சக்தி. சிவா மனசுல சக்தி இருப்பதால், விநாயகர் உதயம். இது போதாதா? 'பார்வதியின் அழுக்கு உருண்டை தான் விநாயகர்' என விதன்டாவாதம் பேசுபவர்களே, அழுக்கு உருண்டையானாலும், விநாயகரை தன் மகனாக ஏற்றுக்கொண்டவர் தான் சிவா, ஸோ, இந்த கேள்வியே அர்த்தமில்லாதது.
சன் டிவி - கஜினி. டைரக்டர் முருகதாஸ், ஹிரோ சூர்யா சிவக்குமார் என எல்லோரும், கனேஷின் தம்பியான முருகனின் பெயர் கொண்டவர்கள். ஒரிஜினல், முகம்மது கஜினியே பதினேலுமுறை படையெடுத்து, கடைசியில் கொள்ளையடித்தது, கனேஷின் தந்தையான சிவன் கோவிலில் தானே?
சன் டிவி - ஸ்பைடர் மென். வேறு ஒரு ஜீவராசியின் தலையை தன் தலையாக கொண்ட விநாயகரின் பிறந்த நாளைக்கு, முழுவதும் வேறு ஜீவராசியின் குணநலன்களுடன் மாறும் ஹிரோவின் படத்தை விட வேறு எந்த படம் பொருந்தும்?
ஜெயா டிவி - டிஷ்யும். படத்தின் ஹிரோ ஜீவா. இவருடைய உண்மையான பெயர் 'அமர் சௌத்திரி'. அமர் யார்? சிவன். சிவன் யார்? விநாயகரின் அப்பா. வேறேன்ன வேண்டும்?
கலைஞர் டிவி - பில்லா. உலக அளவில் இந்த படத்தை வினியோகம் செய்தது, 'ஐங்கரன் இன்டர்நெஷனல்' தான். அது மட்டும் இல்லை, இப்படத்தில் நடித்துள்ள 'செக்கூரிடி' பிரபுவின் முழு பெயர் 'பிரபு கனேசன்' என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பட ஹிரோ, விநாயகரின் தம்பியான முருகனை பற்றி பாடல் பாடுவதை நினைவு கூற விரும்புகிறேன்.
கலைஞர் டிவி - சரோஜா. சரோஜா என்றால் என்ன? தாமரை. யூ நோ, ஆல் காட்’ஸ்(GOD’S) ஆல் டைம் ஃபேவரிட் ஃப்ளவர் இஸ் லோட்டஸ், இன்குலிடிங் லார்ட் கனேசா. விநாயகர் தாமரையில் உட்கார்ந்திருக்கும் படமே சாட்சி.
கலைஞர் டிவி - சற்று முன் கிடைத்த தகவல். ப்ப்பா...இப்பவே கண்ண கட்டுதே... அட போங்கப்பா, ஏதோ ஒரு சம்பந்தம் இல்லாமலா, படம் போடுவாங்க? நீங்களே ஆராய்ச்சி பண்ணிக்கோங்க.
இப்படிக்கு,
தொலைக்காட்சி தொல்ஸ்.
மறக்காம பின்னூட்டம் போடுங்க.
ஒரு உண்மையான ஆராய்ச்சியாளன் இப்படித்தான் இருக்கவேண்டும் தல...,
ReplyDeleteவணக்கம், SUREஷ் (பழனியிலிருந்து) அவர்களே, அதிகமா முடி கொட்டிக்கொண்டிருக்கும் போதே நினைச்சேன், ஆராய்ச்சியா குறைக்கனும்னு....
ReplyDeleteஉட்காந்துபடம் பாருங்கண்ணா.. உட்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா..
ReplyDeleteஆஹாஹ ஆஹா!
ReplyDeleteநாத்தீகன்.... கேடுகெட்ட கிழட்டு மனுஷன், தன் கலைஞர் டிவில சண்டே விடுமுறை சிறப்பு நிகழ்ச்சினு விளம்பரப்படுத்தியது கொடுமை சார்... கிழடன் நீ நாத்தீகன் எண்டால் நாங்க உன்ன தொடரவேண்டியது இல்ல...
ReplyDeleteஹா ஹா ஹா! பிரேக் எடுத்தது இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுறதுக்குத்தானோ?!
ReplyDeleteenga irunthupa ithellam pidikiringa...
ReplyDeleteoru vela room potu yosipangalo...
pota tv karangaluke vinayaha sathurthiku artham therinchirukathu ana neenga piruchu menchutinga.
nallaruku boss..
unmaiyile migavum rasikka mudindhadhu
ReplyDeletevinayakar sathurthikku pooja panneengalaa illaiya! athai sollunga muthalil!
ReplyDeleteகடைசியில் சூப்பர் எஸ்கேப்...
ReplyDeleteநல்ல ஆய்வு...
:)))
சங்கர் சார், பினாத்தல் சுரேஷ்,
ReplyDeleteசங்கா, இஸ்கான், இரா. செந்தில்குமரன் மற்றும் இரு அனானி எல்லோருடைய வரவிற்க்கும், பின்னுட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி.
//உட்காந்துபடம் பாருங்கண்ணா.. உட்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா..//
கடைசி படத்த தவிர மத்த எல்லாம் முன்பே பார்த்த படம், அதான் இப்பிடி யோச்சிக்க வைச்சிடுச்சு.
//ஹா ஹா ஹா! பிரேக் எடுத்தது இந்த மாதிரி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுறதுக்குத்தானோ?!//
பிரேக்க்கு பிரேக் போட வைத்தது 'கந்தசாமி த கிரேட்'
//unmaiyile migavum rasikka mudindhadhu//
நன்றிகள் பல.
//vinayakar sathurthikku pooja panneengalaa illaiya! athai sollunga muthalil!//
கொலுகட்டை, சுண்டலோடு பூஜையும் நல்லாவே முடிஞ்சது, ஊரிலிருந்து வந்த அம்மா புண்ணியத்தில்.
வழிப்போக்கன் சார் வரவிற்க்கும், பின்னூட்டத்திற்க்கும் ரொம்ப நன்றி.
ReplyDeleteஉட்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா..
ReplyDeletesuper..
ReplyDeleteநன்றி முருகானந்தம்
ReplyDeleteshankar,
ReplyDeletebillaavil ajith kumar irukkiraar...kumaar endraal murugan! athai vittuteengale...
satru mun kidaitha thagaval: 'kanal' kannan hero, kannan endraal yaar? pillayaarin maama! appuram kushpoo veru irukkiraaru..avar kanavar peyar enna? sundar! sundar endral sundarar endra sivanai thaanepa kurikkum!! eppudi?
கலக்கிட்டீங்க பிரதீப், தொலைக்காட்சி தொல்ஸ்க்கு தோன்றாத கருத்துக்களை உஙக்ள் ஆராய்ச்சியை மூலம் மக்களுக்கு வழங்கியமைக்காக, நன்றிகள் பல.
ReplyDeleteஉக்காந்து யோசிப்பிங்களோ? பாத்து சார் சன் டிவியிலயோ இல்லை வேறெந்த டி.வியிலயோ கொத்திக்கிட்டு போயி இதயே முதல் நிகழ்ச்சியா வச்சிடப்போறாய்ங்க.
ReplyDelete//உக்காந்து யோசிப்பிங்களோ? பாத்து சார் சன் டிவியிலயோ இல்லை வேறெந்த டி.வியிலயோ கொத்திக்கிட்டு போயி இதயே முதல் நிகழ்ச்சியா வச்சிடப்போறாய்ங்க.//
ReplyDeleteவணக்கம், முகிலன், அப்பிடியாவது ஒரு சீரியலுக்கு ஓய்வு குடுத்தா ரொம்ப சந்தோசம்
>>)))))))
ReplyDelete