Sunday, August 23, 2009

கந்தசாமி


ஸ்ரேயா, கிருஷ்ணா, தேவி ஸ்ரீ பிரசாத்தின் பாடல்கள், வெளி நாட்டு காட்சிகள், ஒரு பிட் ஸாங் இது போதாதா? தெலுங்கில் படம் ஓட வாய்ப்பிருக்கிறது.

இது ஒன்றுதான் தயாரிப்பாளர், கலைப்புலி தானு அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம். மற்றபடி ஆளவந்தானில் படுத்தவரை, படுத்த படுக்கையாக மாற்ற சுசி கணேஷன் போட்ட திட்டத்தில் ஓரளவிற்க்கு வெற்றி பெற்றிருக்கிறார்.

கதையாவது புதிதா என்றால், அதுவுமில்லை, இந்தியனை சுட்டு எடுத்த ரமணா, சிவாஜி மாதிரியான படங்களை சுட்டு, கொத்து பரோட்டா போட்டிருக்கிறார்கள்.

வடிவேலுவா அது? சகிக்கவில்லை, இவர் இப்படியே பண்ணிக்கொண்டிருந்தால், விவேக்கை விடுங்கள், கஞ்சா கருப்பு போன்றவர்கள் ஓவர்டேக் பண்ணி போய்க்கொண்டே இருப்பார்கள். கடைசியில் ஒரு காட்சியில் உருட்டு கட்டையால் தன்னைத்தானே அடித்துக்கொள்வார், பார்ப்பவர்களுக்கும் அதே மாதிரி பண்ணிக்கொள்ளலாம் போலிருக்கிறது.

சி.பி.ஐ டைரக்டராக வரும், கிருஷ்ணாவின் வாயை உற்று பார்த்து தொலைத்து விட்டதால், அவர் தெலுங்கு பேசுவது போலவே ஒரு பிரம்மை.

பிரபுவிற்க்கு செக்கூரிடி வேலையிலிருந்து ப்ரமோஷன் கிடைத்து இருக்கிறது.

விக்ரம் உழைத்து இருக்கிறார், ஆனால், அவருக்கு பீமாவில் பிடித்த சனி, கந்தசாமியை கடந்து இராவனா வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது போலும், ஒவ்வோரு படமும் இரண்டு வருடம் செய்தால் ஏற்கனவே வயதானவரை ரசிகர்கள் "முன்னாள்" ஆக்கிவிடுவார்கள்.

இடைவேளை முடிந்து படம் தொடங்கியதும், விக்ரம் வில்லன்களிடம் உண்மையை சொல்கிறார், அப்பாடா சீக்கிரம் முடிந்து விடும் என்று மனதை தேற்றிக்கொண்டால், மெக்ஸிகோ, புது வில்லன் என கந்தசாமி பார்ட் 2 ஆரம்பித்து விடுகிறார்கள், போதுமடா சாமி.... ரொம்ம்ம்ம்ம்ம்ப நீளம்... தாங்க முடியவில்லை. ஸ்ரேயாவின் உடைகளுக்கு கத்திரி போட்டவரிடம் படத்தை கொடுத்திருந்தாலாவது, படத்தை 'சின்ன'தாய் பண்ணியிருப்பார்.

'முடி இல்லாதவன் மூளை காரன்னு நிருபிச்சிட்டடா' என வடிவேலு ஒரு வசனம் பேசுவார், சுசி கனேஷனுக்கு முடி நிறைய இருக்கிறது.

'ரெண்டு வாரம் பொறுத்தா நல்ல பிரிண்டு 'நெட்'ல வந்துரும்' சொன்ன நண்பரை மதிக்காமல், ஒரு டிக்கெட்டுக்கு 15 டாலர் கொடுத்து, குடும்பத்தோடு போன எனக்கு, ஒரே ஒரு ஆறுதல், மினியாபோலிஸில் உட்கார்ந்து கொண்டு உடனே விமர்சனம் போடமுடிந்தது தான்.

ஆகஸ்ட் முடிந்ததும் திரும்ப வரலாம்ன்னு இருந்தேன், ப்ரேகிற்க்கு ப்ரேக் போட வைத்த கந்தசாமிக்கு நன்றி. மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

14 comments:

  1. ஆக மொத்தம்... கந்தசாமி பார்த்து கடுப்பில் வெந்தசாமி ஆகி வந்து இருக்கீங்க. மீ த க்ரேட் எஸ்கேப். 15 டாலர் மிச்சம்...

    ReplyDelete
  2. விமர்சனம் அருமை. அழகாக வார்த்தை கோர்வையோடு எழுதியிருக்கீங்க... கந்தசாமி நொந்த சாமியா? நல்லவேளை தப்பித்து விட்டேன்.

    ReplyDelete
  3. //'ரெண்டு வாரம் பொறுத்தா நல்ல பிரிண்டு
    'நெட்'ல வந்துரும்' சொன்ன நண்பரை மதிக்காமல், ஒரு டிக்கெட்டுக்கு 15 டாலர் கொடுத்து, குடும்பத்தோடு போன எனக்கு, ஒரே ஒரு ஆறுதல், மினியாபோலிஸில் உட்கார்ந்து கொண்டு உடனே விமர்சனம் போடமுடிந்தது தான்.//

    நண்பன் சொன்னாக் கேக்கணும் பாஸு. :))

    ReplyDelete
  4. சரி.. அடங்கலைன்னா அனுபவிச்சுத்தான் ஆகணும்..!

    ReplyDelete
  5. வாங்க பிரசன்னா இராசன் அவர்களே, 15 டாலர் மட்டுமில்லை, கிடைக்கவிருந்த தலைவலியையும் மிச்சம்

    ReplyDelete
  6. வாங்க கடையம் ஆனந்த் அவர்களே, உங்க‌ளை போன்றோரின் பலருடைய பின்னூட்டம் தரும் ஊக்கம் தான், இன்னும் ஓடிக்கொண்டிருக்க‌ கார‌ண‌ம்

    ReplyDelete
  7. //நண்பன் சொன்னாக் கேக்கணும் பாஸு. :))//
    வாங்க துபாய் ராஜா அவர்களே, எல்லாம் விதி...பட்டாத்தானே புரியுது....

    ReplyDelete
  8. //சரி.. அடங்கலைன்னா அனுபவிச்சுத்தான் ஆகணும்..!//

    வாங்க உண்மைத் தமிழன் அவர்களே, நீங்க சொன்னது உண்மை தான், அதுக்காக, சின்ன தப்புக்கு, கிடைத்த தண்டனை என்னவோ ரொம்ப பெரிசு.

    ReplyDelete
  9. விமர்சனத்துலயும் கலக்குறீங்க. மெல்லிய எள்ளல் நகைச்சுவையுடனான விமர்சனம் அருமை.

    ReplyDelete
  10. Appada, Ippathan ennakku konjam santhosama irrukku... Nanthan mada thanama, Rs.1200/- selavu panni pathennu ninaichikittu veliya sonna aasingamnnu sollama irunthen. Ana enna mathiri innum sila peru irrukarathu pathu etho konjam nimathiya irrukku. Vazhaga valamudan.

    ReplyDelete
  11. வாங்க பார்ட்னர், ஒருத்தன் நொந்து போன, ஊருக்குள்ள எத்தனை பேருக்கு நிம்மதி/ சந்தோஷம்ன்னு இப்பதானே தெரியுது.

    ReplyDelete
  12. Enna partner panrathu. Romba nonthavan innoru nonthavana patha oru chinna Aaruthal. Etho namakkum oru partner irrukknennu.

    ReplyDelete
  13. பார்ட்னர், தமிழ்ல எழுத இந்த லிங்கை பாருங்க. http://english.tamil.live.typewriter.googlepages.com/

    ReplyDelete