Friday, August 28, 2009
சர்தார்ஜி ஜோக்ஸ் - 1
வெண்ணிலா கபடி குழு திரைபடத்தில் ஒரு காட்சி, அதிக பரோட்டா தின்னும் போட்டி. இது நான் பல வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்த, ஒரு சர்தார்ஜியின் ஜோக்கிலிருந்து உருவப்பட்டது, ஆனாலும் மக்களால் ரசிக்கும் படி இருந்தது. ஸோ, மக்களுக்கு ஏதோ என்னால் முடிந்த சேவை, நான் ரசித்த சில சர்தார்ஜியின் ஜோக்குகளை பகிர்ந்துகிரலாம்ன்னு... கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஜோக்குகள் தொடரும்.
ஒரு நாள் ஒரு லண்டன் பீச்சில் நம்ம சர்தார்ஜி படுத்துக் கொண்டு சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தார். சர்தார்ஜியை கடந்து போன ஒருவர் நம்மாளை பார்த்து கேட்டார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
"ஐ ம் பல்பீந்தர் சிங்" அமைதியாக பதில் வந்தது.
கேட்டவர் ஒன்றும் புரியாமல் நடையை கட்டினார். இன்னும் கொஞ்ச நேரத்தில் மற்றொருவர், சர்தார்ஜியிடம் அதே கேள்வி.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
இந்த முறை லேசாக கடுப்பான சர்தார்ஜி, குரலை உயர்த்தி பதில் சொன்னார்,
"நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்"
கேட்டவர் தலையில் அடித்துக் கொண்டு இடத்தை காலி செய்ய, சில நிமிடங்களில் மற்றொருவர்,
"ஆர் யூ ரிலாக்ஸிங்?"
இந்த முறை உண்மையாகவே கடுப்பான சர்தார்ஜி "நோ...நோ... ஐ ம் பல்பீந்தர் சிங்".
சே, இந்த இடமே சரியில்லை, 'ஒரே தொல்லையாக இருக்கு'ன்னு தனக்குள்ளே நினைச்சுக்கிட்டு, வேற இடத்துல போய் படுக்கலாம்ன்னு சர்தார்ஜி கிளம்பினார். போகும் வழியில் இன்னோரு சர்தார்ஜி படுத்துக்கொண்டிருப்பதை பார்த்தார்.
"ஆர் யூ ரிலாக்ஸிங்?" இந்த முறை கேள்வி கேட்டது, நம்ம சர்தார்ஜி.
"யா..." படுத்துக்கொண்டிருந்த சர்தார்ஜி.
உடனே, நம்ம சர்தார்ஜியின் மூளையில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் எரிந்தது. படுத்துக்கொண்டிருந்தவரை பார்த்து சொன்னார்,
"தேர், லாட் ஆப் பிப்பிள் ஆர் லுக்கிங் ஃபார் யூ மேன்"
*********************************************************************************
ஒரு நாள் நம்ம சர்தார்ஜி, சின்னாதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை கான்பிச்சு கேட்டார்.
"இந்த டிவி என்ன விலை?"
கடைகாரன் சர்தார்ஜியை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்
"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."
எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப் மாதிக்கிட்டு வந்து கடைகாரனைப் பார்த்து கேட்டார்,
"இந்த டிவி என்ன விலை?"
"இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." மறுபடியும் அதையே கடைகாரன் சொல்ல, டென்ஷனான சர்தார்ஜிக்கு என்ன செய்யததுன்னு தெரியலை. நம்ம தலை பாகை தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, தலைபாகை கூட இல்லாம, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,
"இந்த டிவி என்ன விலை?"
"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில சர்தார்ஜிக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."
சர்தார்ஜியால பொருக்க முடியலை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,
"டிவி குடுக்கலைன்னா பரவாயில்லை, அட்லீஸ்ட், நான் சர்தார்ஜி தான்னு எப்படி கண்டுபிடிச்சே சொல்லு?"
கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவன் அதான்"
********************************************************************************
Subscribe to:
Post Comments (Atom)
ஏற்கெனவே படிச்சிருந்தாலும், ஜோக் படிக்க கசக்கவா போகுது. தொடருங்கள்!
ReplyDeleteகடைசி ஜோக் சூப்பர்ப்..!
ReplyDeleteமுதல் ஜோக் ஏற்கனவே படித்தது.
வணக்கம் சங்கா, தொடர்ந்து என்னை ஊக்க படுத்தறதுக்கு நன்றி
ReplyDeleteவணக்கம் டக்ளஸ் சார், வரவிற்க்கும் பின்னூட்டத்திற்க்கு நன்றி.
ReplyDeleteரெண்டுமே செம காமெடி தல!
ReplyDeleteவணக்கம் தல, இதை பப்ளிஸ் பண்ணிய பின்பு தான் இதே தலைப்புல இருந்த உங்க பதிவை பார்த்தேன், வால் பையன் தான் டாப்புன்னு நிருபிச்சிட்டீங்க.
ReplyDeleteமுதல் ஜோக் : அடப்பாவி!
ReplyDeleteஇரண்டாவதுக்கு : அடப்பாவி!!
வாழ்க சர்தார்ஜிக்கள்.
நன்றி.
niec twice
ReplyDeleteஅடங் ஙொக்கா மக்கா,
ReplyDeleteசூப்பரப்பா.
சிரிச்சு வயிறு புண்ணாயிடிச்சு.
இடுகைக்கு நன்றி.
- சு. சிவக்குமார், உத்தமபாளையம்.