Tuesday, August 25, 2009

'நோகாமல் நொங்கு தின்ன' - டாப் 10 வ‌ழிக‌ள்

ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிய லாரிகளை ஊர் மக்கள் மடக்கி பிடித்ததாகவும், சம்மந்தபட்ட புண்ணியாவான், ஊர் மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்க்கு சில காந்தி நோட்டுக்களை அள்ளி தெளித்து தொழிலை மக்கள் ஆசியுடன் தொடர்வதாகவும் ஒரு பத்திரிக்கையில் படித்தேன்.தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் விட மாட்டான்னு, சும்மாவா சொன்னாங்க? இடைதேர்தலில் பணம் வாங்கி பழகிபோன நம்ம பொதுஜனம், இப்படி மணல் கொள்ளையர்களிடம், கல்லா கட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள்.இடைதேர்தல் வராத, ஆறு இல்லாத ஊர்காரர்கள், நோகாமல் நொங்கு தின்ன என்ன வழி? ஸோ, கிழ்க்கண்ட பத்து பேரை அனுகினால் ஒரு வேளை நொங்கு கிடைக்கலாம்.

1. வீரப்பன் இல்லியானாலும், அவனைத் தொடர்ந்து மரம் வெட்டி பிழைப்பவர்கள்.
2. மோனேபோலி 'டாஸ்மார்க்'குக்கு எதிராக‌ சொந்த‌மா காய்ச்சி ஊர‌ல் போடுப‌வ‌ர்க‌ள்.
3. ரேஷ‌ன் அரிசியை ப‌க்க‌த்து மாநில‌த்துக்கு க‌ட‌த்துப‌வ‌ர்க‌ள்.
4. ஏரி, குள‌ங்க‌ளை ஆக்கிர‌மித்து, பிளாட் போடும், ரிய‌ல் எஸ்டேட் கார‌ர்க‌ள்.
5. நிலம், குள‌ம் குட்டைக‌ளை தொழிற்சாலை க‌ழிவுக‌ளால் நாற‌ அடிக்கும் தொழில‌திப‌ர்க‌ள்.
6. ம‌க்க‌ளுக்கு பொதுவான‌ நில‌த்த‌டி நீரை அனும‌தியில்லாம‌ உறிஞ்சி பாக்கெட் போட்டு விற்ப‌வ‌ர்க‌ள்.
7. அநியாய‌மா ந‌ன்கொடை வ‌சூலிக்கும், க‌ல்வி த‌ந்தைக‌ள்.
8. குழந்தை தொழிலாள‌ர்க‌ளை வேலைக்கு வைக்கும், தொழில‌திப‌ர்க‌ள்.
9. மருவை, 'கேன்சர்' என்று ஆபரேஷன் செய்து தண்டல் வ‌சூலிக்கும் 'ஒரு சில' மருத்துவமனைகள்.
10. திடீர் என உருவாகி கோடிகளில் புரளும், சொகுசு சாமியார்கள்.

மேலே உள்ள எந்த குப்பனும், சுப்பனும் வாய்க்காத பரிதாபபட்ட ஊர் காரர்களே, உங்களுக்கான ஒரேவழி, உங்கள் ஊர் எம்.எல்.ஏ அல்லது எம்.பி எதுவும் செய்யவில்லைன்னு போராட்டம் நடத்தி இராஜினாமா பண்ண வைக்கலாம். இடைதேர்த‌ல் வ‌ருமில்ல‌?

பின்குறிப்பு 1: நொங்கு தின்ன‌ ஆசைப‌ட்டு எவரும் மேற்குறிப்பிட்டவர்களை த‌னிம‌னித‌னாக‌ அனுக‌ வேண்டாம், அப்புற‌ம், நீங்க‌ளே நொங்கு ஆக‌ வேண்டிய‌து தான்.

பின்குறிப்பு 2: 'நொங்கு' என்ற தலைப்பில், கூகுளிட்டபோது கிடைத்த படங்களில், பொருந்திய இருபடங்கள் உங்கள் பார்வைக்கு.

பிடிச்சிருந்தாலும், திட்டுறதானாலும் மறக்காம பின்னூட்டம் போடுங்க‌.

8 comments:

 1. இதில் கல்லா கட்டர போலிஸ் ஸ்டேஷன் விட்டுடிங்கலே!

  இதுக்கு நொங்குனு வேற பெயர் இருக்குனு இப்போ தான் தெரியுது

  ReplyDelete
 2. mallikaavukkum nungukkum ennada sammanthamnu yosichutte irunthen...adap paavigala...unga creativitykku alave illaya?

  ReplyDelete
 3. நன்றி வசந்த், ராம், பிர‌தீப்.

  //இதில் கல்லா கட்டர போலிஸ் ஸ்டேஷன் விட்டுடிங்கலே!//

  போலிஸ் ஒழுங்கா வேலை பார்த்தா மேலே சொன்ன‌ லிஸ்டே வாராதே... அதால‌ அவிங்க‌‌ல‌ விட்டுருவோம்.

  //இதுக்கு நொங்குனு வேற பெயர் இருக்குனு இப்போ தான் தெரியுது//

  //mallikaavukkum nungukkum ennada sammanthamnu yosichutte irunthen...adap paavigala...unga creativitykku alave illaya?//

  எனக்கும், கூகுள் பண்ணும் வ‌ரை தெரியாது... கூகுள் வாழ்க‌.

  ReplyDelete
 4. குசும்பு பிடிச்ச ஆளாயிருப்பீரு போல! ஹிஹி!!

  ReplyDelete