Wednesday, July 29, 2009

அரசு ஆரம்பப்பள்ளி, அப்பாவு நகர், தருமபுரி


ஒன்னிலிருந்து மூனாவது வரைக்கும் சேலம் நாலுரோடு பக்கம் இருக்கும் லிட்டில் ப்ஃளவர் பள்ளி. ஏதோ கடமைக்காக போனதுனால, சுவாரசியமா ஏதும் சொல்லிக்கிற மாதிரி ஞாபகமில்லை.

அப்பா வேலை காரணமா நாலவதிலிருந்து தருமபுரி தான். அரசு ஆரம்பப்பள்ளி, அப்பாவு நகர், தருமபுரி.

சந்திரா டீச்சர் தான் எங்க கிளாஸ் டீச்சர். ரொம்ப நல்ல டைப். பசங்கலை எப்பவும் அடிக்க மாட்டாங்க.

பாலமுருகன், மணி, வாசு இவிஙக தான் என் தோஸ்த். எங்களுக்குள்ள சின்ன சின்ன சண்டை வந்தாலும், எப்படியோ உடனே சேந்துக்குவோம்.

எங்களுக்கு ரொம்ப பிடிச்ச பீரியட், ரெண்டாவது பீரியட் தான். காரணம், அதுக்கப்புறம் தான் 10 நிமிஷம் இன்டர்வல் வரும், எதையாவது வாங்கி திங்கலாம்.

யார் எது வாங்கினாலும், எல்லோரும் பங்கு போட்டுக்குவோம். எனக்கு வீட்டுல கை காசு(பாக்கெட் மணி) அவ்வள‌‌வா தேறாது. பரிச்ட்சையில காட்றேன்னு சொல்லி ஏமாத்தி வாங்கி தின்னுக்கிட்டிருந்தேன். அவிங்கலும் அத பெரிசா எடுத்துக்கலை.

தேன் மிட்டாய், கல்கோனா, கம்மர் கட்டு, ஜவ்வு மிட்டாய், இலந்த வடை, அவிச்ச கிழங்கு இதெல்லாம் எங்க பேவரிட் ஐட்டம்.

யார்கிட்டயும் காசில்லன்னா... அன்னிக்கு ஸ்கூல் முன்னாடி இருக்கும் பெரிய அரச மரத்திலிருந்து, கிழே விழுந்த அத்திப்ப‌ழத்தை பொறுக்கி எடுத்துக்குவோம்.

மரத்துக்கிழே சின்ன பிள்ளையார் கோவில் இருக்கும், கோவில்ன்னா பெரிய கோவில் எல்லாம் கிடையாது. சின்ன பிள்ளையார் சிலை. முன்னாடி ரெண்டு கருங்கல்லு பலகை அவ்வளவு தான்.

அந்த கருங்கல் பலகை மேல ஏறி உட்கார்ந்துக்கிட்டு அந்த பழங்களை ஊதி ஊதி திம்போம். அத்தி பழத்தில சமயத்துல சின்ன பூச்சி இருக்கும் அதை ஊதி திங்கறதே ஒரு தனி க‌லை.

எப்பவாச்சும் கைல காசு கொஞ்சம் அதிகமிருந்தால், குச்சி ஐஸ் தான். சைக்கிள் கேரியரில பெரிய மரப் பொட்டி, அது தான் மொத்த கடையே, சரியா இன்டர்வல் நேரத்துல சைக்கிள் ஸ்கூலுக்கு வந்துரும், இன்டர்வல் முடிஞ்சதும், ஊர் சுத்த போயிடும்.

ஆரஞ்சு ஐஸ், பால் ஐஸ், கப் ஐஸ், சேமியா ஐஸ் ன்னு, பல ரகம். ரவுண்டா, செவ்வகமா, பல கலருல இருக்கும், சில சமயம், ஒரே ஐஸ்ல ரெண்டு மூனு கலர் கூட இருக்கும்.

அன்னிக்கு ஐஸ்ன்னு முடிவாகி, வாங்க கூட்டத்தில நின்னோம், முதல்ல ஐஸ் வாங்கின பையன் வாயில வைச்சதும், "என்ணண்னெ, ஐஸ் ஒரே உப்பு கரிக்குது" ன்னான்.

டென்சன் ஆன ஐஸ்காரர், "தே, ஐஸ் எங்கியாச்சும், உப்பு கரிக்குமா?" ன்னு சொல்லி, பெட்டிக்குள்ள கையை விட்டார். ஒரு ஐஸை எடுத்து நக்கி பார்த்து விட்டு, "சக்கரை மாதிரி இருக்கு, உப்பு கரிக்குதாம் உப்பு" உள்ளே போட்டார். வியாபாரம் தொடர்ந்தது.

அன்னியோடு குச்சி ஐஸ் வாங்கி சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். இப்போதும், குச்சி ஐஸ் சைக்கிளை பார்க்கும் போதும் இது தான் ஞாபகத்திற்க்கு வரும்.

7 comments:

 1. அருமை அண்ணா!

  எதார்த்தமா எழுதியிருக்கீங்க... சூப்பர். பழச எல்லாம் அப்படியே கிளறுது... கலக்கல் பதிவு...

  பிரபாகர்.

  ReplyDelete
 2. வாழ்த்துக்கு நன்றி தம்பி....

  ReplyDelete
 3. அத்திப்பழம் பாட்டி ஊருக்குச் சம்மருக்குப் போகும்போது நிறையத் தின்றதுண்டு. பாலைஸ், சேமியா ஐஸ், கப் ஐஸ், ம்ம்ம் ம்ம்ம்! எனக்கு உப்புக் கரித்த அனுபவமில்லை. இங்கே போனவாரம் ரோட்டோரத்தில் பார்த்த ஐஸ் தள்ளுவண்டியை வைத்து என் பையனிடம் ஒரு மலரும் நினைவுகள் வாசித்தேன்!

  ReplyDelete
 4. எனக்கும் ஐஸ் உப்பு கரித்த அனுபவம் இல்லை, ஆனாலும் அன்று நடந்தது, குச்சி ஐஸையும், உப்பு கரித்தலையும் என் மனதில் ஆழ பதித்து விட்டது

  ReplyDelete
 5. நண்பர்கள் தின வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நல்லாயிருக்கு. தமிழை மறக்காமல் பதிவெழுவதற்கு வாழ்த்துகள்.

  சில எழுத்து பிழைகளை கவனிக்கவும்.

  ReplyDelete
 7. இப்படியுமா ஐஸ் விற்பார்கள்?

  ReplyDelete