திருச்சி. ஊரில் மிக முக்கிய குடியிருப்பு பகுதியில் அமைந்தது அந்த நகர்.
அதன் மத்தியில் வெளியே தெரியாத மாதிரி, ஒரு தியேட்டர் உண்டு. அந்த நகர் பெயரும், அந்த தியேட்டர் பெயரும், நல்ல எதுகை மேனையுடன் இருக்கும். நல்ல மலர் பெயர் கொண்ட தியேட்டர். (திருச்சி வாசிகளே, உங்களுக்கு தெரியும். மற்றவர்களுக்கு? சரி, கடைசியா தியேட்டர் பேரை சொல்றேன்)
இந்த விஷயத்துல பெரிய ஆளு, ப்ரெண்டோட தம்பி.
தியேட்டர் பேரை சொன்னாலே போதும், அங்க பிட் போடுவானா இல்லியா... என்னைக்கு போடுவான், எவ்வளவு நேரம் போடுவான் எல்லாத்தையும் புட்டு புட்டு வைப்பான்.
அவன் தேதி குறிச்சி சொன்ன ஒரு நாள், எல்லோரும் அந்த தியேட்டரில் ஆஜர், அவனையும் சேர்த்துத்தான்.
படம் ஆரம்பித்து, தியேட்டரில் ஒரே அமைதி.
புருஷனோ பெரிய பிஸினஸ்மேன், டைட்டாக டை(Tie) கட்டிக்கொண்டு ஆபிஸில், வேலை, வேலை...
மனைவியோ எப்போதும் தனியாக படுத்துக்கிடப்பது, ப்ரிஜில் இருந்து தண்ணீர் எடுத்து, மேலே ஊத்திக்கொண்டே குடிப்பது, ஸிம்மிங்கிள் புல்லில் குளித்துக்கொண்டே, பக்கத்து வீட்டு மொட்டை மாடியை பார்ப்பது......
பக்கத்து வீட்டு வாலிபனோ மொட்டை மாடியில் எப்போதும், எக்ஸசைஸ் செய்வது....
இப்படியே படம் ஓடிக்கொண்டு இருந்தது.
இடைவேளை.
எங்க எல்லோருக்கும் ஒரே டென்ஷன்,
"டேய்... என்னடா இது?"
"சும்மா இருங்கண்ணே... இங்க இடைவேளைக்கு அப்புறம் தான்..."
வேறு வழியில்லை, அவன் சொன்னால் சரியாத்தான் இருக்கும். தம் அடித்து முடித்து, கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்டுக் கொண்டு உள்ளே போய் உட்கார்ந்தோம்.
இரண்டே நிமிடத்தில், ஒரு மூலையில் இருந்து விசில் சத்தம் வந்தது.
"டேய் சத்தம் போடாதீங்கடா..." தம்பி.
சத்தம் அப்படியே பரவி, அதிகரிக்க ஆரம்பித்தது....
"அண்ணே.. இங்க சத்தம் போட்டா, போட மாட்டேண்ணே... " தம்பி பதறினான்.
இன்னும் சில நிமிடத்தில் தியேட்டர் முழுவதும், விசில் சத்தம் பரவி, தியேட்டரே திக்குமுக்காடியது.
"ஐய்யோ... ஐய்யோ..., கத்தாதீங்கடா...போடமாட்டான்டா... டேய் கத்தாதீங்கடா..." தம்பி, கூட்டத்தைப் பார்த்து கதறினான்.
"டேய் கத்தாதீங்கடா... டேய் கத்தாதீங்கடா..."
சத்தம் ஓய்ந்தபாடில்லை, "அண்ணே... இன்னிக்கு அவ்வளவு தான்... போடமாட்டான், வாங்க போவோம்... டிக்கெட் பணம் தண்டம்..." சொல்லிக் கொண்டு நடை கட்டினான்.
நாங்கள் எல்லோரும், அவன் பின்னாடியே நடையை கட்டினோம்.
இடைவேளையில் பார்த்த நண்பரை, ஒரு வாரம், கழித்து பேசிக்கொண்டு இருந்த போது, தெரிந்தது, அன்று கடைசிவரை பிட் போடவில்லை என்று.
தம்பி எப்போதும் சரி தான்.
பின் குறிப்பு: என்னது? தியேட்டர் பேரா? உங்க திருச்சி ப்ரண்டை கேட்டு தெரிஞ்சுகுஙக.
முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே... சும்மா பாட்டு வருது... நல்ல பதிவு. சுவாராசியமா இருக்கு...
ReplyDeleteபிரபாகர்...
"பச்சைக் கிளி முத்துச் சரம்
ReplyDeleteமுல்லைக் கொடி யாரோ...."
வருடங்கள் 12க்குப் பின்னே செல்ல வைத்துவிட்டீர்கள்.
நானெல்லாம் சிப்பி தியேட்டர்ல "வாட்ச் ஒன்லி இங்க்லிஷ் மூவிஸ்".
ReplyDelete(போற வழில முல்லை தியேட்டர் போஸ்டர்லாம் பாத்து பெருமூச்சு விட்டுட்டே....ஹ்ம்ம்ம்ம்)
சங்கர் ஜி,
ReplyDeleteBlogger settings ல் Word Verification எடுத்துவிடுங்கள். பின்னூட்டமிடுவதற்கு அது ஒரு தொந்தரவான விஷயம்.
:-))
ReplyDeleteஇதுல இவ்வளவு நுண்ணரசியல் விவரங்கள் இருக்குதா!
முல்லை தியேட்டர் நாங்களும் திருச்சி தான்ங்கோ ;)
ReplyDeleteதியாகராஜன் சார், இது நடந்தும், 12 வருஷம் ஆச்சு.
ReplyDeleteஹா ஹா. ’தில்லை’ நகர் ’முல்லை’ என்ன எதுகை மோனை. பழைய நினைப்பை எல்லாம் கிண்டி வுட்டுடீங்கோ...
ReplyDeleteகொசுவத்திய சுத்த வச்சிடீங்க.
ReplyDeleteஅருமை.