Sunday, July 19, 2009

அமெரிக்க உழவர் சந்தை

போட்டோவில் ராம் என்கிற 'ஷக்கி மாமா' உழவர் சந்தையில்.

முதலில் என் புகைபடங்களை வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு மிக்க நன்றி, நன்றி, நன்றி. இனி இதன் கதை.

நண்பர் ராம் லஞ்ச் பாக்ஸை திறந்ததும், பருப்பு கீரை நறுமணம் தூக்கியது.

"ராம் வாசனை பட்டைய கிளப்புது... என்ன கீரை?"

"மனதக்காளி கீரை..."

"ரியலி? 2 வருஷம் ஆச்சு, லாஸ்ட் இந்தியா ட்ரிப்-ல சாப்பிட்டது. எங்க வாங்கினது, பூஜாலயா(இந்தியன் ஸ்டோர்)?"

"நீங்க வேற, இது ஃபார்மர்ஸ் மார்கெட்-ல வாங்கினது."

"ஃபார்மர்ஸ் மார்கெட்-லயா? அந்த ஸ்டோர் எங்க இருக்கு?"

"அது ஸ்டோர் இல்ல, உழவர் சந்தை மாதிரி, நம்ம கம்யூனிடி சென்டர் பார்க்கிங் லாட்-ல எவ்ரி தர்ஸ் டே போடறாங்க, ஒரு பெரிய கீரை கட்டு ஒரு டாலர் தான், அதுவும் ரொம்ப பிரஸ்ஸா இருக்கு. கீரை மட்டுமில்லை, இன்னும் நிறைய ஐட்டம்ஸ் இருக்கு, வேன்னா... நெக்ஸ்ட் வீக் நாம சேந்து போவோம்"

அடுத்த வியாழக்கிழமை. மதியம் 3 மணி. ஆத்துக்காரம்மகிட்ட(அட,WIFE தாங்க) இருந்து போன்.

"நானும் சுஜாதாவும், ஃபார்மர்ஸ் மார்கெட் போயிட்டு வந்திடறோம்"

"சரி சரி, அப்ப பாப்பா...?"

"அவ தூங்கறா... எழ்றதுக்குள்ள வந்துருவோம், அப்படியே எழுந்தா... உங்க அம்மா பார்த்துக்குவாங்க"

அப்பாடா ஒரு வேலை மிச்சம். அடுத்த 10 நிமிடத்துல மீண்டும் போன், மறுபடியும், வைஃப்க்கிட்ட இருந்து தான். "ஏங்க.. பாப்பா எழுந்து அழறா... நீங்களே போயிட்டு வந்திருங்க."

நானும் ராமும், 4 மணிக்கெல்லாம், ஆரம்பித்தோம். போகும் போது பேச்சு, என் புது ப்ளாக் பற்றி அடிபட்டது.

"நெக்ட், இந்த உழவர் சந்தை பற்றி எழுதுங்களேன்..."

"ஸூப்பர் ஐடியா... பட்டைய கிளப்பிடுவோம்... சே, கேமரா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்."

"அதான் உங்க ஐபோன்(iPhone) இருக்குள்ள..."

"ஆமா இல்ல... மறுபடியும், நல்ல ஐடியா குடுத்தீங்க... இதுக்காகவே உங்க படம் போட்டு உங்களை பேமஸ் ஆக்கிடறேன்."

"ஐய்யயோ அதெல்லாம் வேனாம், அப்புறம் இந்தியா போனா ஏர்போர்ட்ல இருந்தே ரசிகர் தொல்லை ஆரம்பிச்சுடும்...ஸோ... தினமலர் அந்து மணி, லென்ஸ் மாமா மாதிரிஎன் தலையை ப்ளாக் பண்ணிருங்க..."

"அவ்வளவு கஷ்டம் எதுக்கு, உங்க போட்டோவை அப்படியே போட்டு, இது தான் 'ஷக்கி மாமா'ந்னு எழுதிடறேன். (எங்கள் குருப் ஜூனியர் எல்லாம், ராமை 'ஷக்கி ஷக்கி' நு சொல்லி தான் விளையாடும். காரணம், குழந்தைகள் பர்த்டே கொண்டாடும் ஒரு இடம் Chuck'e Cheese. அங்கு Chuck என்று ஒரு கேரக்டர் உண்டு. ராம் அடிக்கடி குழந்தைகளிடம் நான் தான் Chuck'e என்று சொல்லி விளையாடுவார்).

ப்ளாகில் சும்மா போட்டோ போடுவதற்க்கு பதிலா விகடனுக்கு அனுப்பினால் என்ன என்று தோனியது. இந்த போட்டோக்களுக்கான விகடன் லின்ங் அமெரிக்க உழவர் சந்தை

பின் குறிப்பு: இந்த ப்ளாகை படிப்பவர்கள், நண்பர் ராமுக்கு ரசிகர் மன்றம் ஆரம்ப்பித்து, அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று தயவு செய்துக் கேட்டுக்கொள்கிறேன்.

3 comments:

  1. ஏற்கெனவே விகடன்ல பார்த்து உங்களோட முந்தைய இடுகையில பின்னூட்டம் போட்டுட்டாலும் இன்னுமொரு முறை போட்டா முறைச்சுக்குவா போறீங்க?!, எனக்கு இங்க உழவர் சந்தை வருடம் முழுவதும் (Rain or Shine)!!! புதிது புதிதாக பழங்கள், காய்கறிகளை அறிமுகப்படுத்திய இடம். ஒரு இடுகைக்கு நாட் குடுத்திருக்கீங்க, நன்றி...

    ReplyDelete
  2. அருமை.

    தொடருங்கள்..

    வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete