Thursday, July 16, 2009

தேக்கடி போட்டிங் டிக்கெட்காலேஜ் டூர். கொடைகானல் போலாம்ன்னு முடிவாச்சி. மொத்த பஸ்ஸுக்கு ஆள் சேராததினால, தனியா டூர் பஸ் புக் பண்ணலை. அதுவுமில்லாம, எந்த வாத்தியும் கூட வரலை.

சரி, ரெகுலர் பஸ்லயே டிக்கெட் வாங்கி ஒரு குருப்பா போய்வரலாம்ன்னு முடிவாச்சு.

கடைசி நாளு, என்னாச்சுன்னு தெரியலை, க்ளாஸ் ரெப் சுந்தரேசன் என்கிட்ட வந்து, வசூல் பணத்தை தினிச்சு, "என்னால வர முடியலை, எல்லோரும் ஒழுங்கா போய்ட்டு வாங்க, எல்லா பணத்துக்கும், ஒழுங்கா கணக்கு வைச்சுக்கோ"ன்னான்.

இத பாத்த PVP-க்கு அப்பவே பகீர்ன்னுச்சு, "என்னாடா இந்த குடிகாரா கும்பலுக்கிட்ட இப்படி மொத்த பணத்தையும் தூக்கி குடுத்துட்டானே" ன்னு ஒரே யோசனை. நானும் அவனும், ஒரெ ஊருக்காரனா போனதால, என்கிட்ட ஒன்னும் சொல்லவும் முடியலை, மெள்ளவும் முடியலை.

எல்லோரும் தாம்பரம் பஸ்ஸாடான்ட்ல ஆஜர். பஸ்ஸுக்கு இன்னும் 2 மணி நேரம் இருந்ததால, நானும் என் கேங்கும் அப்படியே ஒரு பார் பக்கமா ஒதுங்க ப்ளான் போட்டோம்.

எப்படியோ இது PVP தெரிந்சு, நானும் வாரேன்னு, எங்க கூடவே திரிஞ்சான். ஒரு வழியா அவனை கழட்டி விட்டுட்டு, ஆளுக்கு ஒரு பீர் உள்ள தள்ளிக்கிட்டு , ஒரு ஃப்ள்(FULL) ஸ்டாக் பண்ணிக்கிட்டு வந்தோம்.

"வசூல் பணத்தை ஆரம்பத்திலேயே இப்பிடி பண்றீஙகளேடா..." பொறுக்காம கேட்டுட்டான்.

சொந்த பணத்துல குடிச்சாலும், இவனுக்கு வேற பதில் சொல்லவேண்டி இருக்கேன்னு... எனக்கு ஒரெ டென்ஷன், "ஆமாம், கடைசியில கணக்கு காட்டும் போது சரியில்லைன்னா கேளு".

கொடைகானல் போய் சேர்ந்தோம்.

ஒரு ஹோட்டலல சாப்பிட போனா போதும்..., ஒரு பொட்டி கடையில தம் வாங்க போனா போதும்... , எப்பவவும், PVP பின்னால நிப்பான். சொன்னா நம்ப மாட்டீங்க டூர் முடியிற வரை நிழல் மாதிரி இருந்தான்.

கொடை முடிச்சு, திரும்ப போறதா ப்ளேன்... வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.

திரும்ப போனாலும், கைல கொஞ்சம், வசூல் பணம் மீதி இருக்கும்ன்னு சொன்னேன். யாரோ இப்பிடியே, தேக்கடி போய் வந்துரலாம்ன்னு ஐடியா சொன்னாங்க. அது எல்லாருக்கும் புடிச்சி போச்சி.

ஆனா, அதுக்கு பணம் பத்தாது, அதனால, தலைக்கு எவ்வளவுன்னு முடிவு பண்ணி எல்லார்க்கிட்டயும் வசூல் பண்ண ஆரம்பிச்சோம், PVP-யும் அழுதுக்கிடே குடுத்தான்.

ஒரு வழியா டூர் முடிஞ்சு, கணக்கு பார்த்தா... கொஞ்சம் இடிக்குது. எல்லாம் ஒழுங்கா எழுதி வைச்சும் கடைசியா இப்பிடி ஆச்சேன்னு ஒரெ வருத்தம். என்ன யோசனை பண்ணியும் கணக்கு வரலை, PVP சும்மா விட மாட்டானேன்னு ஒரு பக்கம் பயம் வேற.

கடைசியா அவனே, உதவிக்கு வந்தான், கணக்கு சீட்டை வாங்கி பார்த்தான், "தேக்கடி போட்டிங் டிக்கேட் மிஸ் பண்ணியிருக்க பாரு"

அதை போட்டதும், உடனே, கணக்கு டேலி ஆச்சு.

கொடைக்கானல்ல ப்ரண்ட் சுகுமார் அடிச்ச கூத்தை அடுத்த பதிவுல சொல்றேன்.

6 comments:

Prabhagar said...

அருமை அண்ணா...

பட்டய கிளப்புறீங்க... சுகுமார் கூத்த சீக்கிரம் எழுதுங்க....

பிரபாகர்...

சங்கா said...

அன்பரே, நன்றாக எழுதுகிறீர்கள்! உங்களை “Interesting Blog" விருதுல கோர்த்து விட்டிருக்கிறேன் (http://wimpystar.blogspot.com/2009/07/2_16.html)

பிடித்திருந்தால் தொடருங்கள்!

நன்றி
சங்கா

சங்கா said...

உங்கள் புகைப்படத் தொகுப்பு விகடனில் பார்த்தேன், வாழ்த்துகள்!

Anonymous said...

PVP - ketta varthaiya?

சங்கர் தியாகராஜன் said...

PVP நண்பரோட பெயரின் சுருக்கம்

jaffarsidhik said...

SUPER TOUR PVP YA FULLFORM ODA SONNA NALLA IRUKUM

Post a Comment