Tuesday, July 21, 2009

ப்ளாக் புட்டுக்கும், பேக்கப் ஃபைலும் வைரஸ் வந்து காலி ஆகும்


இந்த கடிதம் வந்து 5 நாட்களுக்குள், இதே மாதிரி இன்னும் 50 பேருக்கு நீங்களும் கடிதம் எழுத வேண்டும், அப்படி செய்த பலருக்கு அடுதத 30 நாளில், ஒரு தங்க புதையல் கிடைத்தது, மகளுக்கு திருமணம் ஆனது. பதவி உயர்வு கிடைத்தது. இதை உதாசினப் படுத்தியவருக்கு, அடுத்த 10 நாளில், ஆக்ஸிடெண்ட் ஆகி கால் போனது. வீடு ஜப்திக்கு வந்தது, அவர் மனைவிக்கும் தீராத வியாதி வந்தது.
இப்படிக்கு,

.......துனை.

உங்களில் பலர் இதை மாதிரி கடிதம் பார்த்திருக்கலாம், அல்லது கேள்விப்பட்டிருக்கலாம்.

இதை போன்ற கடிதம், நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டிற்க்கும் வந்திருக்கிறது. என்ன செய்யலாம்? என்று இதை பற்றி என் பெற்றோர் பேசிக்கொண்டதும் ஞபாகம் இருக்கிறது. என்ன செய்தார்கள் என்று தெரியாது.

நிற்க.

நானோ ப்ளாகிற்க்கு புதிது, என் தினவை தீர்த்துக்கொள்ள ப்ளாக் - யை ஆரம்பித்துவிட்டேன். அவ்வப்போது, மற்றவர் பதிவை படிப்பேன், ஆனால், பின்னூட்டம் இட மாட்டேன். அதுவும், என் பதிவில் பின்னூட்டம் எழுதியவருக்கு கூட பதில் பின்னூட்டம் இடுவதில்லை. இடக்கூடாது என்று ஆனவம் ஏதும் இல்லை, ஏனோ தோன்றியதில்லை.

சென்ற வாரம், சங்கா அவர்களிடமிருந்து ஒரு பின்னூட்டம் வந்து இருந்தது. 'உங்களை “Interesting Blog" விருதுல கோர்த்து விட்டிருக்கிறேன், பிடித்திருந்தால் தொடருங்கள்!' - என்று.

சஙகாவிற்க்கு நன்றி சொல்லிவிட்டு, விருதா? அது என்ன? எது? என்று தெரிந்து கொள்ளலாம் என்று புறப்பட்டேன். அலுவலக வேலை ஒரு பக்கம், நான் இப்போது சீரியஸாக செய்து கொண்டு இருக்கும் ஸ்டாக் மார்கெட் ஒரு பக்கம், ப்ளாக்(Blog) ஒரு பக்கம் ('எப்பவும் இந்த லேப்டாப கட்டிக்கிட்டு அழுவுங்க' பொண்டாட்டி சொல்வதையெல்லாம் இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிடுகின்றேன்.) ஒரு வாரமாக பலரின் பதிவுகளை மேய்ந்து திரிந்தேன். பல உண்மை புலப்பட்டது. மேலே உள்ள கடிதம் எனது கற்பனையில் வேறு மாதிரி தோன்றியது.

இதே மாதிரி இன்னும் 6 பேருக்கு நீங்களும் கொடுக்க வேண்டும், அப்படி செய்த பலருக்கு அடுதத 30 நாளில், பல ஃபாளோயர்ஸ்(Followers ) சேர்ந்தார்கள். ஒவ்வொரு பதிவும், யுத்ஃபுல் விகடனில் வரும், எல்லா பதிவும் நிறைய ஒட்டுக்கள் பெறும். இதை உதாசினப் படுத்தியவருக்கு, அடுத்த 10 நாளில், ப்ளாக் புட்டுக்கும், பேக்கப் ஃபைலும், வைரஸ் வந்து காலி ஆகும்.

இப்படிக்கு,

.......துனை.

சரி மொக்கை போதும், சீரியஸ்ஸாக விஷயத்திற்க்கு வருவோம்.

'பலரின் பதிவுகளை மேய்ந்து திரிந்தேன்' என்று சொன்னேன் அல்லவா? அதில் புலப்பட்டது, தன்னுடைய திருப்திக்காக எழுதுவதாக பலர் சொன்னலும், கீழே உள்ள சில சின்ன விஷயங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துகிறது. (என்னையும் சேர்த்துத்தான்)

1. தன்னுடைய பதிவிற்க்கு பின்னுட்டம் நிறைய வருவது,

2. தன்னுடைய ப்ளாக் - க்கு நிறைய ஃபாலோயார்ஸ் சேருவது.

3. ஓட்டுப்பதிவில் தன்னுடைய பதிவிற்க்கு அதிக ஓட்டுக்கள் கிடைப்பது.

4. தன்னுடைய ப்ளாக் - க்கு நிறைய ஹிட்டுக்கள் கிடைப்பது.

5. எல்லாவற்றிக்கும் மேலாக 'பட்டாம்பூச்சி', 'சுவாரசியமான ப்ளாக்' போன்ற சின்ன சின்ன விஷயங்கள்.

இதெல்லாம் பொய் என்றால், ஃபாலோயார்ஸ் எதற்கு? ஹிட் கௌண்டர்கள் எதற்கு? ஓட்டுக்கள் எதற்கு? பின்னுட்டமும் அதற்கு பதிலும் எதற்கு?

ஒருவரோ , 'பட்டாம்பூச்சி', 'சுவாரசியமான ப்ளாக்' இருமுறை வாங்கினேன் என பெருமை கொள்கிறார், இன்னொருவரோ, இதில் ஒன்றுமில்லை என சங்கிலியை துண்டிக்கிறார். இது அவரவர் விருப்பம்.

''என்னடா சொல்ல வர வென்ரு?' என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. ஆதலால்...

முகம் தெரியாத ஒருவர், அவருக்கு பின்னூட்டம் இடாமல், ஃபாலோயாராக சேராமல், இதை அளிக்கிறார் என்றால், என் பதிவில் உள்ள ஏதோ ஒரு விஷயம் அவரை கவர்ந்திருக்கிறது என்று தானே பொருள்? ஸோ, சங்கா என்னை சந்தோஷ படுத்திய மாதிரி, இன்னும் 6 பேரை சந்தோஷ படுத்தலாம்(சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷ படுத்தறது தான் - யாரு முதல்ல சொன்னங்களோ தெரியாது, நான் முதல்ல கேட்டது, பாக்யாவில் பாக்யாராஜ் சொன்னப்பத்தான்) என எண்ணி, என்னை ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்த, கீழே உள்ளர்களுக்கு, 'Interesting Blog' விருது போய் சேருகிறது.

சங்கிலியை தொடர்வதும், அறுப்பதும் அவரவர் விருப்பம்.

சூர்யாவின் வண்ணத்துபூச்சியார்,

என்.கணேசனின் என்.கணேசன்,

சுரேஷின் சக்கரை,

தம்பி பிரபாகரின் வாழ்க்கை வாழ்வதற்கே...,

வடகரை வேலனின் வடகரை வேலன்,

நாகாவின் ஒரு ஊரில்....

பின்குறிப்பு: இப்போதெல்லாம் முடிந்த வரை படிப்பதற்க்கு நல்ல பிள்ளையாக பின்னுட்டமோ பதில் பின்னுட்டமோ இடுவது என்று முடிவு செய்துள்ளேன். ஹூம்,,, பார்ப்போம்.

14 comments:

  1. அண்ணா,

    சுகுமாரின் கூத்துக்கா காத்திருக்கிறேன், ரிலீஸ் செய்யுங்கள்...

    இன்ட்ரஸ்டிங் பிளாக்கில் என்னையும் இணைத்ததற்கு நன்றி.

    பின்னூட்டம் பற்றி ஒரே ஒரு வேண்டுகோள். தவறு இருப்பின் அட்லீஸ்ட் சுட்டிக்காட்டுங்கள்.

    தம்பி,
    பிரபாகர்.

    ReplyDelete
  2. நன்றி சங்கர் தியாகராஜன் அவர்களே

    ReplyDelete
  3. நன்றி பேராசிரியரே.. விருதுகள் பல திசைகளிலிருந்து குவிந்த வண்ணமுள்ளன. உங்கள் ஊக்குவிப்பே எமக்குக் குருதியாய் எம்மை இயங்கச் செய்கிறது

    ReplyDelete
  4. நன்றி நண்பா ரொம்ப சந்தோசம், கண்டிப்பா இந்த விருதை மனமார ஏற்றுக்கொண்டு ஒரு பதிவு இடுகிறேன் கொஞ்சம் தாமதம் ஆகலாம் காரணம் நான் தற்போது சின்ன ஓய்வில் இருக்கேன்

    ReplyDelete
  5. விருதை ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  6. தம்பி, குடித்து விட்டு கும்மாளம் போட்டது சுகுமார் மேட்டர், ஸோ, 'சுவாரசியமான விருது'க்கேற்ப கொஞ்சம், சுவாரசியமான மற்றும் நல்ல விஷயங்களை சொல்லலாம் என்று இருக்கிறேன்

    ReplyDelete
  7. என் கணேசன் அவர்களே, மிக நல்ல விஷயங்களை நன்றாக எழுதுகிறீர்கள், தொடருங்கள்

    ReplyDelete
  8. //நன்றி பேராசிரியரே.. விருதுகள் //

    சத்தமா சொல்லாதீங்க நண்பரே உண்மையான நல்ல பேராசிரியரேல்லாம் கோவிச்சிக்க போறாங்க

    ReplyDelete
  9. சுரேஷ், நீங்க நிதானமா ப்ரேக் முடிச்சிட்டு வாங்க, அது வரை, மத்த விளம்பரம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்

    ReplyDelete
  10. நீங்கள் விருது கொடுத்தவர்களுக்கு வாழ்த்துகள்!
    ஏற்றுச் சிறப்பித்தமைக்கு நன்றி உங்களுக்கும்!
    என்னைப் பொறுத்தவரைக்கும் ஓட்டுகளிலோ, ஃபாலோயர்ஸிலோ, ஹிட்லிஸ்ட்டிலோ அவ்வளவு ஆர்வமில்லை. ஆனால் பின்னூட்டம் மட்டும் எதிர்பார்க்கிறேன், நான் எப்படி எழுதுகிறேன் என்று சற்று புரிந்து கொள்ள!( அட்லீஸ்ட் ஒரு ஐந்து வெவ்வேறு நபர்களிடமிருந்து)

    ReplyDelete
  11. சங்கா கருத்துக்கு நன்றி. இந்த பதிவில் குறிப்பிட்டவை, பொதுவாக யாரையும் தனியாக குறிப்பிடுபவை அல்ல, என்னையும் சேர்த்து. பின்குறிப்பை பார்த்தால் உங்களுக்கே புரியும்

    ReplyDelete
  12. நானும், என் எதிர்பார்ப்பு என்ன என்று சும்மா ஒரு தகவலுக்காகத்தான் சொன்னேன். வேறு விசேஷமாக எதுவும் இல்லை.

    ReplyDelete
  13. சங்கர் தியாகராஜன், இன்று தான் இந்த பக்கமே வருகிறேன். முதலில் அதற்காக மன்னிக்கவும். தங்கள் அன்புக்கும் விருதுக்கும் நன்றி. இனி தொடர்ந்து வருவேன்.

    மற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. Stock Market என்று குறிப்பிட்டுள்ளதால் எனது இன்னொரு வலையான நந்தவனத்தின் இந்த பதிவை அவசியம் பார்க்கவும்.

    http://mynandavanam.blogspot.com/search/label/Radio

    கருத்தும் சொல்லவும்.

    ReplyDelete