Monday, July 13, 2009

ஏய், கொத்து பரோட்டாவும், சிக்கன் 65 - யும் எடுத்து வை.


ஒரு ஆங்கில படம்.

கதை களமும், நடக்கும் சுழழும் அவர்கள் நாட்டிலேயே (ஏதோ ஒரு வெஸ்டர்ன் கன்ட்ரி என்று வைத்துக்கொள்ளுங்கள்) நடக்கிறது.

படத்தில், தாதா வில்லன், கதாநாயகியான தன் வீட்டு வேலைக்காரியிடம், சாப்பாடு கொண்டு வா என்கிறான், எப்படி சொல்லியிருப்பான்?

1. ஏய், சேன்ட்விச்(Sandwich) போட்டு எடுத்து வை.
2. ஏய், கொத்து பரோட்டாவும், சிக்கன் 65- யும் எடுத்து வை.

உங்கள் விடை 1 என்றால், நீங்கள் ரொம்ப சரி. விடை 2 என்றால், நீங்கள் ரொம்ப பெருமை பட்டுக்கொள்ளலாம்.

நீங்களும், ஸ்லம்டாக் மில்லினர், இயக்குனர்(Danny Boyle) மாதிரியே 'அபத்தமாக' சிந்திப்பவர் என்று.

பின்னே? எந்த மும்பாய் வில்லன் சன்ட்விச் சாப்பிடுவான்? கொத்து பரோட்டா, இல்லையென்றாலும், மினிமம், ஒரு ரொட்டி, நான்(Naan) ஏதாவது ஒன்று தான் கேட்டிருப்பான், என்ன சொல்றீங்க?

இந்திய தனத்தோடு, பல அருமையான காட்சிகளை, அமைத்த இயக்குனர் எப்படி இதில் கோட்டை விட்டுட்டார்?

3 comments:

  1. //இந்திய தனத்தோடு, பல அருமையான காட்சிகளை, அமைத்த இயக்குனர் எப்படி இதில் கோட்டை விட்டுட்டார்? //

    இந்த மாதிரியெல்லாம் நீங்க கேள்வி கேட்கத்தான் பிரதர்...

    பிரபாகர்...

    ReplyDelete
  2. வாஜாரே !!! பரோட்டா கேட்டது , டைரு டக்குறு இல்ல , நம்ப டப்பிங் பண்ண பெரி மன்சளுங்கோ தான், இதுக்கே, இப்பிடி கோச்சிக்கீறியே !!! நைட்டு அட் தி மீசியம் இன்னு
    கீற படத்துல, ( ஆங்கிலம் - தமிழ் ) ஹீரோ , பாடுவாரு பாரு பாட்டு , வாள மீனுக்கும் ,
    வெளாங்கு மீனுக்கும் கல்யாணம், .... சூப்பர் பா !!!

    ReplyDelete
  3. டவுசர் பாண்டி நைனா... கமெண்டு உட்டதுக்கு, ரொம்ப சந்தோஷம், நா இன்னும், டமில பிலிம பாக்கல... பாத்துட்டு அப்பால ரிப்லை பன்ரன். ஆனா, நா ரெண்டு தபா...இங்லிபீஸ்ல தான், பாத்தன், அத பத்தி தான் ப்லாக்ல கிறுக்கிகிறேன்

    ReplyDelete