Friday, June 19, 2009

முதல் வேலை


எங்கள் வகுப்பில் முதலில் வேலைக்கு சேர்ந்தது நானாகத்தான் இருக்கும். (அதன் பிறகு இந்த வேலையை ராஜினாமா செய்து விட்டு மூன்று வருடம் கழித்தும் வேலை தேடி அலைந்தது மிகப் பெரிய கதை.)

அப்பாவின் சிபாரிசு. அப்பாவின் நண்பரின் அண்ணன், அண்ணா யூனிவர்சிட்டி ரிட்டயர்ட் ப்ரொபசர், அவருடைய கம்பெனி. அப்போதைக்கு கம்ப்யூட்டர் துறையில், அது ஓரளவுக்கு தெரிந்த கம்பெனி தான்.

சிபாரிசு என்றாலும் இன்ட்ர்வியூ(பெயரலவில் தான் என்றாலும், அப்போது, அது எனக்கு தெரியாது).

வியாழன் மதியம், 4 மணி இருக்கும். ரூமுக்குள் அழைத்தார்கள்.

புத்தகம் எழுதிய விஷயத்தை எல்லாம் சேர்த்தும், Resume ஒரு பக்கத்தை தாண்டவில்லை. தாம்பரத்தில் ஏதோ ஒரு கடையில் Electronic Type Writter-ல் அடித்து, Xerox போட்டது.

நீட்டினேன். வாஙகி டேபிள் மீது போட்டவர்(என் வருங்கால மேனெஜர்) அதை பார்க்கக்கூட இல்லை.

உட்கார சொன்னார். Thanks சொல்லி உட்கார்ந்தேன்.

"B.E computer science-அ?"

"யெஸ் சார்"

"சரி. 10 DOS Commands சொல்லுங்க"

"CLS...DIR...DATE... TIME....ம்... ம்... " டேபிளுக்கு கீழே 4 விரல் நீட்டி இருந்தது.

"அப்புறம்?" - என்பது போல பார்த்தார்.

"ம்... CD... MD... RD..." - இப்பொது ஏழு விரல், அப்பாடா இன்னும் மூனு தான்... மூச்சை இழுத்து விட்டேன்.

"ஏதாவது அட்வான்ஸ்டு COMMANDS சொல்லக்கூடாதா?"

"ம்... DEL.." எட்டு விரல். என்ன யோசித்தும் வேறு எந்த COMMAND-ம் ஞாபகம் வரலை.

"இதுதான் அட்வான்ஸ்டு COMMAND-அ?... சரி எங்க தங்கி இருக்கீங்க?"

"பெருங்கழத்தூர்..."

"ஒரு நிமிஷம்..." என் ரெசுமெ-வை எடுத்துக்கொண்டு வெளியெ போனவர் அறை நிமிஷத்தில் உள்ளே வந்தார்.

"மன்டே மார்னிங் வேலைக்கு வந்துருங்க"

"ரொம்ப தேங்க்ஸ் சார்" கைகுலுக்கி தயங்கி நின்றேன், அதை புரிந்து கொண்டு, "அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் எல்லாம் நேராகைல சர்வர்".

மாசம் ரூ. 1500, 'சாப்ட்வர் இம்ப்ளிமெண்டர்', உடனெ ட்ரைனிங் ஆரம்பம். TMB பேங்க்-யை கம்ப்யூட்டர் மயமாக்குவது தான் வேலை. ஒரு மாதம் ட்ரைனிங் கொடுத்து, என்னை நம்பி, உடுமலைபேட்டை TMB பேங்க்-யை கையில் கொடுத்தார்கள்.

ஒரு பக்கம் குஷி, சம்பள்ம் போக, தினம் ரூ.50 தினப்படி. மற்ற செலவு எல்லாம் கம்பெனி பார்த்துக் கொள்ளும். மறுபக்கம் ஒரெ டென்ஷன். ஏதாவது சொதப்பினால்?

என்ன ஆகிவிடும்? வேலை போகுமா? பார்த்து விடலாம்ன்னு குருட்டு நம்பிக்கை ஒரு ஓரம்.

பயந்த மாதிரி ஏதும் நடக்கவில்லை. எல்லாம் நன்றாகவே போனது. போறாத குறைக்கு இராஜ மரியாதை வேறு. எனக்கு கண்ணாடி ஏஸி அறை, இன்டர்நெட்டும் அப்போது இல்லை. ஒரே பொழுதுபோக்கு SOLITAIRE GAME. விளையாடிக் களைத்து போகாமல் இருக்க, டீ, வடை தவறாமல் இரண்டு வேளை.

இரண்டு 386 SERVER MACHINE-க்கு மத்தியில், உட்கார்ந்து இருக்கும் என்னை, அதிசயமாக, கண்ணாடிக்கு வெளியே இருந்து வேடிக்கை பார்க்கும் ஒருசில கஸ்ட்டமர்ஸ்.

எப்போதாவது "சார் சார்... DD பிரிண்ட்டர்ல மாட்டிகிச்சி..." மாதிரி கம்ப்ளையன்ட் மட்டும் தான்.

தின்மும் மதிய தூக்கம், மாலை சினிமா, வார கடைசில், கோவை(RC, வெங்கட் ரூம்), பழனி, திருமூர்த்திமலை - னு ஊர் சுற்றல், இப்படியே வாழ்க்கை சுகமாக போனது.

என் ஒரே ப்ராப்ளம், பேங்க் STAFF-க்கு ட்ரைனிங் கொடுப்பது தான்.

8 -லிருந்து 9 வரை ட்ரைனிங், 9 -லிருந்து பேங்க் வேலை, அவர்களுக்கு. 8 -லிருந்து 9 வரை ட்ரைனிங் கொடுப்பது, 9 -லிருந்து SOLITAIRE GAME, எனக்கு. பேங்க் மேனெஜர் மட்டும் இதற்கு விலக்கு, அவர், ஏற்கனவே வேறு ப்ரான்ச்-ல் ட்ரைனிங் முடித்தவர்.

"யாரவது ட்ரைனிங்க்கு சரியா வரலைன்ன சொல்லுங்க" மேனெஜர் என்னிடம் தனியாக சொல்லி வைத்திருந்தார்.

ஒரு STAFF மட்டும் எப்பொதும் ஏதாவது காரணம், சொல்லி வரவே மாட்டார். அவர் தினமும் சொல்லும் காரணமும் நம்பும்படி இருக்கும்.

"சார்... நான் தான் ஸ்கூல்ல விட்னும்ன்னு பையன் ஒரே தொல்லை..."

"மாமியாரை ரயில் ஏத்தி விட லேட்டயிடுச்சு... சார்"

"ஸ்கூட்டர் மக்கர் பன்னிடுச்சு, டவுன் பஸ் புடிச்சு வந்தேன் சார்...."

எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மேனெஜரிடம் சொல்லிரலாமா? சே...பாவம்... மறுபடி ஏதும் நம்ப முடியாத படி சொன்னால் பார்த்துக்கொள்வோம் என்று விட்டு விட்டேன்.

ஒரு நாள் திரும்பவும், கிளாஸ் முடியும் போது வந்தார். பேண்ட், சட்டை எல்லாம் நனைந்து காய ஆரம்பித்து இருந்தது.

"ஸாரி சார்... வீட்டை விட்டு கிளம்பும் போது, தண்ணி வந்துடுச்சு... இன்னிக்கு விட்டா மறுபடியும் ரெண்டு நாள் கழிச்சுத்தான் தண்ணி வரும்...."

பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டேன். கடைசி வரை அவரை பற்றி மேனெஜரிடம் சொல்லவே இல்லை.

5 comments:

  1. அண்ணா,

    இந்த கதைய ப்ளாக் எழுதனும்னே என்கிட்ட சொல்லாம விட்டுட்டீங்களா? செமயாய் இருக்கு. இன்னும் நிறையா சர்ப்ரைஸ் கொடுங்கள்...

    பிரபாகர்.

    ReplyDelete
  2. சூப்பரா இருக்கு நண்பரே.

    ReplyDelete
  3. சார் நீங்களும் உடுமலைப்பேட்டையா????????????????

    ReplyDelete
  4. //தின்மும் மதிய தூக்கம், மாலை சினிமா, வார கடைசில், கோவை(RC, வெங்கட் ரூம்), பழனி, திருமூர்த்திமலை - னு ஊர் சுற்றல், இப்படியே வாழ்க்கை சுகமாக போனது.//

    எங்க வீடு திருமூர்த்தி மலை போற வழில தான்..

    ReplyDelete
  5. பெத்தவங்க இருக்குறதால தருமபுரி. மத்தபடி நாடோடிங்க நான், இப்போதக்கு, யூஎஸ்-ல மினியாபோலிஸ்

    ReplyDelete