அமெரிக்க கண்டங்களின் பூர்வகுடிகள் செவ்விந்தியர்கள், அவர்களுக்கு எதற்கு இந்தியர்கள் என பெயர் வந்தது?
துருக்கிய நாட்டினர், ஆசிய பட்டு சாலையை மூடியதும், செல்வம் கொழித்த இந்திய மண்ணுக்கு வந்து வர்த்தகம் செய்ய ஒரே வழி ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றுவது தான், இதற்கு மாற்று கடல் பாதை தேடி, 1492-ல் மேற்கு வழியாக கொலம்பஸ் செல்ல, அவன் கரைஒதுங்கிய பரப்பு தான், இன்றைய அமெரிக்க கண்டம். அங்கிருந்த செவ்வின பூர்வகுடிகளை இந்தியர்கள் என் நினைத்ததால், செவ்விந்தியர்கள் ஆனார்கள்.
“1492 conquest of paradise” என்ற படத்தை பார்க்க நேரிட, அதில் அவனை நல்லவன் போல் திரித்து செல்லபட்ட கட்டுக்கதைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் என கூறிக்கொண்டு, ஐரோப்பியர்கள் செய்த காட்டுமிராண்டித்தனங்கள் கொலம்பஸ் காலத்தில் ஆரம்பித்து பல நூற்றாண்டுகளாக தொடந்து கொண்டிருக்கிறது. ஆம் இன்றும் தொடந்து கொண்டுதானிருக்கிறது, மறைமுகமாக.
செவ்விந்தியர்கள் தங்கள் இனம் காக்க, இரத்தம் சிந்திய வரலாறு நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.
ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்திற்க்காக வில் அம்பு கொண்டு போரிடும் வல்லவர்களை துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும் கொண்டு கொத்து கொத்தாக கொன்று குவித்தார்கள். (இது தான் Avathar படத்தின் ஒன் லைன்).
கால்நடைகளை மந்தை மந்தையாக பட்டிக்குள் அடைப்பது போல, Reservations என கூறி, ஒரு குறுகிய உபயோகப்படாத நிலபரப்பில் இவர்களில் பலர் இன்றளவும் அடைப்பட்டிருக்கிறார்கள்.
போலி வாக்குறுதிகள் வழங்கி, பல விதமான ஒப்பந்தங்களை போட்டு நிலங்களை கையகப்படுத்தி கொண்டு, எதையும் நிறைவேற்றாமல் மேற்கு பக்கமாக துரத்தப்பட்டிருக்கிறார்கள்.
குளிர்காலங்களில், அம்மை நோய் கண்டு இறந்த ஐரோப்பியரின் கம்பளிக்களை கொடுத்து பல ஆயிரக்கண்க்கான ஏக்கர் நிலத்தை செவ்விந்தியர்களிடமிருந்து எழுதி வாங்கிக்கொண்டார்கள்.
அவர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் முடிவுக்கு கொண்டு வர, சிறு குழந்தைகளை பொற்றோரிடமிருந்து வழுக்கட்டாயமாகப் பிரித்து Borading school எனக் கூறி கிருத்துவர்களாக மாற்றி சித்திரவதை படுத்தப்பட்டார்கள். அந்த திட்டத்திற்க்கு பெயர், kill indians save men.
தங்கம் தேடி வெட்டப்பட்ட சுரங்கங்களிலும், கரும்பு, புகையிலை தோட்டங்களும் கூலி வேலை செய்ய அடிமைகளாகவும், கருப்பினத்தவர்களுக்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்டார்கள்.
உழவர் திருநாள் (Thanks Giving) என்பது, கடவுளுக்கும், நிலம் கொடுத்து விவாசாயத்திற்கு உதவிய செவ்விந்தியர்களுக்கும் நன்றி கூறும் திருநாள் என பட புத்தகத்தில் சொல்லி கொடுத்துக்கொண்டிருக்கின்றது இன்றைய அமெரிக்கா.
அமெரிக்காவில், நவம்பர் நான்காம் வியாழன் கொண்டாடப்படும் இந்த திருநாளை செவ்விந்தியர்கள் யாரும் கொண்டாடுவதில்லை. இது அவர்களுக்கு ஒரு துக்க நாள்.
அமெரிக்காவில், 12 வருடங்கள் பணிபுரிந்து, பல இடங்களை சுற்றி இருக்கிறேன், இதில் செவ்விந்தியர்களின் இன்றைய, பண்டைய நகரங்களும் அடக்கம். தழிழில், அங்கொன்றும் இங்கொன்றும் ஒரு சில நிகழ்வுகள் மட்டுமே, பதியப்பட்டுள்ளது, எனக்கு தெரிந்து முழுமையாக யாரும் எழுதியதாக தெரியவில்லை, இருந்தால் தெரிவியுங்கள்.
இலங்கையில், இன படுகொலைகளை சமகாலத்தில் கண்ட நமக்கு, அதை விட பல மடங்கு வீரியம் கொண்ட இந்த வரலாற்று நிகழ்வுகள் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை காரணமாக 2009-ல் Blogging - யை முடித்துக்கொண்டேன். இதை தழிழில் பதிவு செய்யவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன், என்னுடைய "பட்டைய கிளப்பு" -ஐ தூசி தட்டி ஆரம்பிக்கிறேன் இந்த தொடருக்காக. முடித்தவரை தவறாமல், ஒவ்வோரு வாரமும், வெள்ளிக்கிழமை பதிவிட எண்ணம்.
இதை thanksgiving weekend-ல் ஆரம்பிப்பதில் மிக்க மகிழ்ச்சி.
தொடரும்...