Tuesday, September 1, 2009
காக்டெயில்
ஜூலை 10 அன்று, மைக்கேல் ஜாக்சனுக்கு அமெரிக்காவில் இன்டியானா மாநிலத்தில் உள்ள அவர் பிறந்த ஊரான கேரியில் ஒரு நினைவு சின்னம் வைத்தது, நம்ம ஊர் ஆள் செந்தில் முருகானந்தம்.
மைக்கேல் ஜாக்சனை மானசீக குருவாக நினைக்கும், பிரபு தேவாவே, உருகி உருகி நயனை லவ்விக் கொண்டிருக்கிறார். அன்றாடம், உதவி வேண்டி பல்லாயிர கணக்கான நம்ம ஊர் மக்கள் ஏங்கி நின்று கொண்டிருக்கும் போது, அவர்களுக்கெல்லாம் உதவாமல், ஜாக்சனுக்கு நினைவு சின்னம் வைக்க வேண்டும் என்று செந்திலுக்கு என்ன வந்தது?
விசயம் இது தான். இவர் அமெரிக்காவில் வைத்திருக்கும் "ஸ்டோன் பிளான்ஸ்" என்ற கம்பெனி, கல்லறைக்கு, மற்ற பல விசயங்களுக்கு, கல் தோண்டி, டிசைன் செய்து, பதித்து கொடுப்பது வரை எல்லாவற்றையும் செய்யும். இனி சாக போகும் பல்லாயிர கணக்கான ஜாக்சன் ரசிகர்களில் கொஞ்சம் பேராவது இவர்களுக்கு ஆர்டர் கொடுத்தால், இவருக்கு நன்றாக கல்லா கட்டும், அதான்.
மார்கெட்டிங் உத்தியில் நம்ம ஆட்களும் முன்னெறிவிட்டார்கள் என் பெருமை பட்டுக் கொள்ள வேண்டியது தான்.
உலகின் மிக சிறந்த இசை கலைஞனுக்கு என்னாலான அஞ்சலி என கண்கலங்கி விகடனில் அளித்த பேட்டியை படித்த போது, சகிக்கமுடியவில்லை, சிரிப்புத்தான் வந்தது.
*************************************************************************************
100 வயது ஆரோக்கியமாக வாழ்வதற்கான மந்திரம் என்ன?
100 + 100 = 100 தான். அதாவது, உடலை வழுபடுத்த 100 மணிநேர உடற்பயிற்சி, மனதை வழுபடுத்த 100 மணிநேர யோகா, ஒவ்வொரு வருடமும் இதை தொடர்ந்தால், 100 வயதுக்கு வாய்ப்பு அதிகம், மண்லாரியில் சிக்காத வரை.
டிவியில் ஏதோ காலை நிகழ்ச்சியில் பார்த்ததாக, பகிர்ந்து கொண்ட நண்பருக்கு நன்றி.
*************************************************************************************
நண்பர் காரைக்குடிகாரர். நான் வெஜ் பிரியர். சிக்கன் ஐட்டம் என்றால், வெட்டுவெட்டு என வெட்டுவார். அவரை பார்த்து இன்னோரு வெஜிடேரியன் நண்பர் சொல்லியிருக்கிறார்,
"நீ செத்து நரகத்துக்கு போனதும், உன்னால செத்த கோழிகளையெல்லாம் விட்டு உன்னை கொத்த விடுவாங்க பாரு...."
அதுக்கு நண்பர் சொன்ன பதில்,
"அதெல்லாம் நடக்காது மச்சி, அடடா, இங்கயும் வந்துட்டானான்னு, கோழிங்க எல்லாம் தெரிச்சு ஓடும்"
இதை கேட்ட நான் நண்பரிடம் சொன்னேன்,
"இது ரெண்டுமே நடக்காது, ஏன்னா, நீ நரகத்துல படுற அவஸ்தையை, சொர்கத்திலிருந்து கோழிங்க எல்லாம் பார்த்து ரசிக்கும்"
*************************************************************************************
Subscribe to:
Posts (Atom)